செய்திகள்
போரிஸ் ஜான்சன்

விளையாட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Published On 2020-09-09 16:26 GMT   |   Update On 2020-09-09 16:26 GMT
அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை ஓர் உலுக்கு உலுக்கியது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஜூலை மாதத்திற்குப் பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து என ஒவ்வொரு நாடாக விளையாட்டை தொடங்கின.

ஆனால் ரசிகர்களை அனுமதிக்க அரசுகள் மறுத்து விட்டன. இதனால் போட்டிகள் அனைத்து ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தில் ரசிகர்களுக்கு வருகிற 1-ந்தேதி (அக்டோபர்) முதல் அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘இந்த மாத இறுதியில் அதிக பார்வையாளர்களுடன் நடைபெற இருக்கும் பைலட் நிகழ்ச்சியை திருத்த வேண்டும். அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து மைதானத்தினங்களுக்கு ரசிகர்கள் திரும்புவதற்கான நமது நோக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அதுகுறித்து ஆய்வு செய்து, சுருக்க வேண்டும்.’’என்றார்.
Tags:    

Similar News