செய்திகள்

எகிப்து அதிபரின் பதவிக்காலம் நீட்டிப்பு - மக்களின் பொது வாக்கெடுப்பு தொடங்கியது

Published On 2019-04-20 18:13 IST   |   Update On 2019-04-20 18:13:00 IST
எகிப்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக நீட்டிப்பது, பாராளுமன்றத்தில் மேல்சபையை உருவாக்குவது தொடர்பாக மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு இன்று தொடங்கியது. #Egyptianpresident #Egyptreferendum #constitutionalamendments
கெய்ரோ:

எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக அங்கீகரிக்க சமீபத்தில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட்டது.

மேலும், பாராளுமன்றத்தில் புதிதாக மேல்சபையை உருவாக்குவது, துணை அதிபர் பதவியை ஏற்படுத்துவது உள்பட எகிப்து அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களும் செய்யப்பட்டது.

இவற்றுக்கு மக்களின் ஒப்புதலை பெறுவதற்காக கருத்தறியும் பொது வாக்கெடுப்பு 20-4-2019 முதல் 22-4-2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 14 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

2014-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட எகிப்து அரசியலமைப்பு சட்டத்தின்படி, அந்நாட்டின் அதிபரோ, பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருமடங்கு பெரும்பான்மை கொண்ட குழுவினரோ ஒரு அந்நாட்டின் அடிப்படை சட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு புதிய சட்டத்தை இயற்றலாம். பின்னர், இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு பெரும்பான்மை ஆதரவை பெற்றாக வேண்டும். 

அதன்பிறகு, மக்களின் கருத்தையறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் மூன்றில் இருமடங்கு பேரின் தீர்ப்பின்படி, அந்த சட்டம் செல்லுபடியாகலாம் அல்லது கைவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #Egyptianpresident #Egyptreferendum #constitutionalamendments
Tags:    

Similar News