செய்திகள்

ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வேன் - லலித் மோடி ஆவேசம்

Published On 2019-04-19 22:15 GMT   |   Update On 2019-04-19 22:15 GMT
மோடி என்று பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன் என லலித் மோடி குறிப்பிட்டுள்ளார். #LalitModi #RahulGandhi
லண்டன்:

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 13-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மோடி என்று பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர் கள் என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்தார். தனி நபரான என்னை விமர்சிப்பதற்காக ஒரு இனத்தையே ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார் என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி, பாட்னா நகர தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.



இந்நிலையில் நிதி முறைகேடு புகாரில் சிக்கி இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளிட்டுள்ள செய்தியில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுல் காந்தியை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன். 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது காந்தி குடும்பம் தான் என்பது உலகிற்கே தெரியும்” என்றும் பதிவிட்டுள்ளார். #LalitModi #RahulGandhi
Tags:    

Similar News