செய்திகள்

அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி

Published On 2019-04-16 23:03 GMT   |   Update On 2019-04-16 23:03 GMT
அமைதிப்படைக்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது. #UnitedNation #AntonioGuterres
நியூயார்க்:

உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.

இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார்.  #UnitedNation #AntonioGuterres
Tags:    

Similar News