செய்திகள்

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்

Published On 2019-03-29 15:15 GMT   |   Update On 2019-03-29 15:15 GMT
நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #NiravModi
லண்டன்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
 
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான அடுத்த விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #NiravModi
Tags:    

Similar News