செய்திகள்

முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்

Published On 2019-02-19 07:22 GMT   |   Update On 2019-02-19 09:06 GMT
சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. #Israel #Beresheet
டெல் அவிவ்:

சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது.

இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.

இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ தலைவர் மோரிஸ்கான் கூறியதாவது:-

“சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்றார்.

இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்புகிறது. இதில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. #Israel #Beresheet
Tags:    

Similar News