செய்திகள்

அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை

Published On 2019-02-14 23:36 GMT   |   Update On 2019-02-14 23:36 GMT
பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்:

பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News