செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

Published On 2019-02-08 15:17 GMT   |   Update On 2019-02-08 15:17 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.9 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் இன்று இரவு 7.55 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் நிலடுக்கத்தால் வீடுகளில் இருந்த் மக்கள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் மின்டானாவோ தீவு உள்பட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #PhilippinesEarthquake
Tags:    

Similar News