செய்திகள்

அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து வாலிபர் பலி

Published On 2019-02-07 20:23 GMT   |   Update On 2019-02-07 20:23 GMT
அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். #ECigarette #Exploded
வாஷிங்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2 மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து பலியானது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News