செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 11-ம் தேதி இந்தியா வருகை

Published On 2019-01-30 12:23 GMT   |   Update On 2019-01-30 12:23 GMT
ஒருநாள் பயணமாக பிப்ரவரி 11-ம் தேதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #NetanyahuIndiavisit
ஜெருசலேம்:

இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. டெல் அவிவ் நகருக்கு பதிலாக ஜெருசலேம் நகரம் அந்நாட்டின் தலைநகராக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நாடுகளின் ஆதரவை பெறுவதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிரம் காட்டி வருகிறார்.

முன்னர் தூதரக உறவுகள் இல்லாத ஓமன், சாட் ஆகிய நாடுகளில் முதன்முறையாக சுற்றுப்பயணம் செய்து புதிய நல்லுறவுக்கான வாசலை அவர் சமீபத்தில் திறந்து வைத்தார்.

பாலஸ்தீனம் நாட்டுடனான அமைதி நடவடிக்கைகளில் முடக்கநிலை ஏற்பட்டுள்ள இவ்வேளையில் உலகத் தலைவர்களை இஸ்ரேலுக்கு சாதகமாக அணி சேர்க்க திட்டமிட்டுள்ள பெஞ்சமின் நேதன்யாகு, ஒருநாள் பயணமாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி இந்தியா வருகிறார்.

டெல்லியில் அன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசும் அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு டெல் அவிவ் நகருக்கு சென்றதும்,பெஞ்சமின் நேதன்யாகு  2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா வந்ததும் நினைவிருக்கலாம். #IsraeliPM #BenjaminNetanyahu #NetanyahuIndiavisit 
Tags:    

Similar News