செய்திகள்

மெக்சிகோ பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது

Published On 2019-01-22 05:45 GMT   |   Update On 2019-01-22 05:45 GMT
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலத்த காயமடைந்த மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து பைப்லைன் தீ விபத்தில் உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் பலத்த தீக்காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெக்சிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 14,894 இடங்களில் சட்டவிரோத பெட்ரோல் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MexicoFire
Tags:    

Similar News