செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு- விபத்தில் 3 பேர் பலி

Published On 2019-01-14 15:08 IST   |   Update On 2019-01-14 15:08:00 IST
அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். #USSnowStorm
வாஷிங்டன்:

அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியது.

இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, சோரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலவிமானங்கள் தாமதமாக வருகின்றன.  அனேகமான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. விர்ஜீனியாவில் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.  #USSnowStorm
Tags:    

Similar News