செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் 20 பேர் பலி

Published On 2019-01-12 14:35 GMT   |   Update On 2019-01-12 14:35 GMT
நைஜீரியா நாட்டின் தெற்கு பகுதியில் பெட்ரோல் லாரி கவிழ்ந்து, வெடித்து சிதறிய விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #20killed #Nigeria #tankerexplosion #Nigeriatankerexplosion
நைஜர்:

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.

வேகமாக சென்ற லாரி ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிச்சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்த லாரியில் இருந்து பெட்ரோல் வழிந்தோடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களுடன் ஓடிசென்று பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சைபெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #20killed #Nigeria #tankerexplosion #Nigeriatankerexplosion
Tags:    

Similar News