செய்திகள்
ராபர்ட் முகாபேவுடன் கிரேஸ்.

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே மனைவிக்கு பிடிவாரண்டு

Published On 2018-12-20 05:55 GMT   |   Update On 2018-12-20 05:55 GMT
ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. #GraceMugabe
ஹராரே:

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தவர் ராபர்ட் முகாபே. அவருக்கு தற்போது 94 வயது ஆகிறது.

கடந்த ஆண்டு புரட்சி மூலம் அவரது ஆட்சி அகற்றப்பட்டது. ராபர்ட் முகாபேவியின் 2-வது மனைவி கிரேஸ் முகாபே. 53 வயதான இவர் ராபர்ட் முகாபேவின் செயலாளராக இருந்து வந்தார். 1996-ல் ராபர்ட் முகாபே கிரேசை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு கிரேசை அதிபராக்க முகாபே முயற்சி செய்தார். இதனால் தான் அவரது ஆட்சியை புரட்சி மூலம் வெளியேற்றினார்கள்.

தற்போது ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் கிரேசும் இருப்பதாக தெரிகிறது. கிரேஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகி கேபரில்லா என்பரை தாக்கினார்.

தாக்கப்பட்ட மாடல் அழகி.

மின்சார வயரால் சரமாரியாக தாக்கியதாகவும், இதில் காயம் அடைந்ததாகவும் கேபரில்லா கூறினார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கிரேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கிரேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து ஜிம்பாப்வே போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்வதற்காக வாரண்டை சர்வதேச அளவில் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே கிரேஸ் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. #GraceMugabe
Tags:    

Similar News