செய்திகள்

இந்தியா, சீனா, ரஷியா நெருக்கத்தால் வயிற்றெரிச்சல் - ஜி-20 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கவில்லை

Published On 2018-12-01 05:13 GMT   |   Update On 2018-12-01 05:13 GMT
இந்தியா, சீனா, ரஷியா நெருக்கத்தால் கலக்கமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஜி-20 உச்சி மாநாட்டின் உலக வர்த்தகம் தொடர்பான இரண்டாம்நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. #TrumpskipG20 #G20
பியுனஸ் அய்ரெஸ்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வர்த்தக கொள்கையை உருவாக்கியுள்ளார். ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பலமடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையில் RIC என்றழைக்கப்படும் ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில்  மூன்று நாட்டு தலைவர்களும் நேற்று சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது பல்வேறு துறைகளில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.



ஜி-20 மாநாட்டின் இரண்டாம் அமர்வாக உலக வர்த்தகம் தொடர்பாக இந்த அமைப்பில் உள்ள தலைவர்கள் உரையாற்றுவதாக இருந்தது. வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, சீனா, ரஷியா ஆகியவை நெருக்கமாகியுள்ளதால் கலக்கமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

அவர் பங்கேற்காததால் உலக வர்த்தகம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி அந்நாட்டின் சார்பில் வேறு யாரும் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை என ரஷியா நாட்டின் நிதி மேம்பாட்டுத்துறை மந்திரி மேக்சிம் ஓரெஷ்கின் குறிப்பிட்டுள்ளார். #TrumpskipG20  #G20  
Tags:    

Similar News