செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - பீதியில் மக்கள் ஓட்டம்

Published On 2018-11-16 06:48 GMT   |   Update On 2018-11-16 06:48 GMT
அமெரிக்காவில் பால்டி மோர் நகரில் யூதர்களின் பாரம்பரிய விழாவில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். #Americashot

வாஷிங்டன்:

அமெரிக்காவில் பால்டி மோர் நகரில் யூதர்களின் பாரம்பரிய விழா நடை பெற்றது. அதையொட்டி அங்கு இசை நிகழ்ச்சி நடந்தது. அதை ஏராளமானவர்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சர்வாதிகாரி ஹிட்லர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை வாழ்த்தி கோ‌ஷங்கள் எழுப்பினார். அதே நேரத்தில் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதனால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து தப்பி வெளியேற முயன்றனர். பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

கலிபோர்னியா மது பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிட்ஸ்பர்க் நகரில் யூதர்களின் இசை நிகழ்ச்சி யில் முன்னாள் கடற்படை வீரர் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மதவெறி காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது.

அது போன்று இங்கும் யூதர்களுக்கு எதிரான மத வெறி தாக்குதல் நடைபெறும் என்ற எண்ணத்தில் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

அங்கு போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் டிரம்பை வாழ்த்தி கோ‌ஷமிட்ட நபரை பிடித்து சென்றனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. கூச்சலிட்ட நபரின் பெயரும் வெளியிடப்படவில்லை. #Americashot

Tags:    

Similar News