செய்திகள்

அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை

Published On 2018-11-12 21:35 GMT   |   Update On 2018-11-12 21:35 GMT
சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. #Alibaba #SalesRecord
ஷாங்காய்:

சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் நவம்பர் 11-ந் தேதியன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. பல்வேறு சலுகைகள், அதிரடி விலை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான விற்பனை கடந்த 10-ந் தேதியே பல்வேறு கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. இந்த விற்பனை தொடங்கிய முதல் 2 நிமிடங்களிலேயே 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. இது ஒரு மணி நேரத்தில் 10 பில்லியன் டாலராக (சுமார் ரூ.72 ஆயிரம் கோடி) உயர்ந்தது.

இவ்வாறு அந்த ஒருநாளில் மட்டும் பல லட்சம் கோடி அளவுக்கு விற்பனை நடந்தது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகவும், அலிபாபா வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகவும் கருதப்படுகிறது. 
Tags:    

Similar News