செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி முன்னிலை- டிரம்புக்கு பின்னடைவு

Published On 2018-11-07 09:56 GMT   |   Update On 2018-11-07 09:56 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. #USpolls
வாஷிங்டன்:

அமெரிக்க பாராளுமன்றத்துக்கு மிட்டெர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது.  இதில் 100 பேரில் மூன்றில் ஒரு பங்கு செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 436 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது அதிபர் தேர்தலுக்கு சமமான தேர்தலாக கருதப்படுகிறது. மேலும் 36 மாகாணங்களுக்கு இந்த வருடம் கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

இந்த கட்சி 194 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 174 இடங்களை பிடித்துள்ளது.

இதன் மூலம் அதிபர் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டிரம்புக்கு இன்னும் 2 ஆண்டுகள் மீதம் உள்ளது. புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

அதே நேரத்தில் செனட் சபை தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று மெஜாரிட்டியை தக்க வைத்துள்ளது. அதில் உள்ள 100 இடங்களில் குடியரசு கட்சி 51 இடங்களை பிடித்துள்ளது. ஜனநாயக கட்சி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது. #USpolls
Tags:    

Similar News