செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உளவு பார்த்ததாக கைதான இங்கிலாந்து மாணவர் ஜாமீனில் விடுதலை

Published On 2018-10-30 10:04 GMT   |   Update On 2018-10-30 10:04 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் உளவு பார்த்ததாக கைதான இங்கிலாந்து மாணவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:

இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூஸ் ஹெட்ஜஸ் (31). இவர் ஐக்கிய அரபு அமீரக நாடான துபாயில் உள்ள துர்காம் பல்கலைக் கழகத்தில் டாக்டருக்கு படித்தார்.

கடந்த மே 5-ந்தேதி இவரை துபாய் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் 2 வாரங்களாக விசாரணை நடத்தினர். முடிவில், அவர் உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே அவரை விடுதலை செய்ய கோரி உலகம் முழுவதும் உள்ள 120 கல்வி நிறுவனங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடப்பட்டது.

அதை தொடர்ந்து மாத்யூ ஹெட்ஜெஸ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கவில்லை. மீண்டும் வருகிற 21-ந் தேதி விசாரணைக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News