செய்திகள்

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிப்பு

Published On 2018-10-21 20:57 GMT   |   Update On 2018-10-21 20:57 GMT
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். #HouthiMilitantsKilled
சனா:

ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
 
இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா மீது தீராப்பகையை உண்டாக்கி உள்ளது. இதனால் சமீப காலமாக சவுதி அரேபிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல்கள் ஹூடியத் மற்றும் துரிஹெமி மாவட்டங்களில் நடந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #HouthiMilitantsKilled
Tags:    

Similar News