செய்திகள்

டிரம்ப் அரசுக்கு எதிராக ஐ.டி. நிறுவனங்கள் வழக்கு

Published On 2018-10-16 06:48 GMT   |   Update On 2018-10-16 06:48 GMT
எச்-1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக டிரம்ப் அரசு மீது ஐ.டி. நிறுவனங்கள் 2-வது முறையாக வழக்கு தொடர்ந்துள்ளது. #DonaldTrump #H1BVisa #WorkPermit

வாஷிங்டன்:

அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும்.

அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றவுடன் அதற்கான எச்-1பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார். அதன்மூலம் எச்-1பி விசாவின் காலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 1000-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். அங்கு எச்-1பி விசா மூலம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

 


தற்போது எச்-1பி விசாவின் காலத்தை குறைப்பதன் மூலம் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமின்றி ஐ.டி. நிறுவனங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிருப்பு சேவை துறையின் மீது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நகர ஐ.டி நிறுவனத்தினர் கோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தனர்.

43 பக்க புகாரில் எச்-1பி விசா செல்லுபடியாகும் காலத்தை குறைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விசா வழங்கும் அதிகாரத்தை தொழிலாளர் துறைக்கு வழங்க அமெரிக்க பாராளுமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக தற்போது 2-வது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018 ஜூலை மாதம் முதல் முறையாக வழக்கு தொடரப்பட்டது. #DonaldTrump #H1BVisa #WorkPermit

Tags:    

Similar News