செய்திகள்

பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவராக அசிம் முனிர் நியமனம்

Published On 2018-10-10 10:12 GMT   |   Update On 2018-10-10 10:12 GMT
பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக முன்னாள் ராணுவ உளவுத்துறை தலைவர் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார். #LtGenAsimMunir #PakistanISI #ISIhead
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக முன்னாள் ராணுவ உளவுத்துறை தலைவர் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்ரவாதத்தை அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

இதைதொடர்ந்து, அந்த பதவியில் ராணுவ உளவுத்துறை தலைவராக பணியாற்றிய  லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. #LtGenAsimMunir #PakistanISI #ISIhead 
Tags:    

Similar News