செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.3 சதவீதமாக இருக்கும்- ஐஎம்எப் கணிப்பு

Published On 2018-10-09 05:26 GMT   |   Update On 2018-10-09 05:34 GMT
நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
வாஷிங்டன்:

ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது.


பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் போன்ற திட்டங்களால் முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுப்பட்டதன் காரணமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் சந்தை அபாயங்கள் அதிகரித்திருப்பதால் உலகளாவிய அளவில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாக குறையும் என்றும், வர்த்தக மோதல் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியும் குறையும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
Tags:    

Similar News