செய்திகள்

ஆவணங்களில் இருந்து தந்தை பெயரை நீக்ககோரி பாகிஸ்தான் பெண் வழக்கு

Published On 2018-10-05 09:11 GMT   |   Update On 2018-10-05 09:11 GMT
தந்தை என்னைவிட்டு பிரிந்து வாழ்வதால் ஆவணங்களில் இருந்து அவரது பெயரை நீக்ககோரி பாகிஸ்தான் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ததீர் பாத்தீமா (18). தந்தை இவரை விட்டு பிரிந்து விட்டார். தாயுடன் சேர்ந்து வாழும் இவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் ‘‘எனது தந்தை நான் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எனவே பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எனது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் அவரது பெயரை நீக்கி உத்தரவிட வேண்டும்.

குழந்தைகள் வேண்டாம் என கை கழுவிவிட்டு சென்ற பெற்றோரின் பெயரை குழந்தைகள் ஏன் சுமக்க வேண்டும்’’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிகார், நீதிபதிகள் உமர் அதாபண்டியால் இனாசுல் அக்சான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆவணங்கள் குறித்த விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News