செய்திகள்

ஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு - 20 பேர் பலியானதாக தகவல்

Published On 2018-09-22 08:40 GMT   |   Update On 2018-09-22 08:40 GMT
ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று ராணுவ அணிவகுப்பின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சுமார் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #gunattack #militaryparade
டெஹ்ரான்:

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின்போது அண்டை நாடான ஈரான் மீது போர் தொடுத்தார். கடந்த 1980-களில் 8 ஆண்டுகள் இந்த போர் நீடித்தது.



இந்த போரின் நினைவுநாளையொட்டி ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று ராணுவ குசேஸ்தான் மாகாணத்தின் தலைநகரான அவாஸ் நகரில் இன்று ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்வையிட ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

 அப்போது, அவ்வழியாக காக்கிச் சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை, பெண்கள், ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #gunattack #militaryparade  
Tags:    

Similar News