செய்திகள்

ரூ.7 ஆயிரம் கோடிக்கு ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்குகிறது

Published On 2018-09-05 12:12 IST   |   Update On 2018-09-05 12:12:00 IST
ஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #India #Railways #BulletTrain #Japan
டோக்கியோ:

மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மணிக்கு 508 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரெயில்கள் வாங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ரெயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும். அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.

புல்லட் ரெயில்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுகிறது. ஜப்பானில் இயங்கும் புல்லட் ரெயில்கள் மிகவும் பாதுகாப்பானவை. எனவே ஜப்பான் உதவியுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



புல்லட் ரெயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் இருப்பது போன்று புல்லட் ரெயிலிலும் முதல் வகுப்பு வசதி இருக்கும். #India #Railways #BulletTrain #Japan
Tags:    

Similar News