செய்திகள்

முன்னாள் மனைவியை கொன்ற அமெரிக்க முதியவருக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை

Published On 2018-09-04 19:52 IST   |   Update On 2018-09-04 19:52:00 IST
மலேசியாவில் வசிக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் தனது முன்னாள் மனைவியை கொலை செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Malaysia
கோலாலம்பூர்:

மலேசியாவில் வாழும் அமெரிக்கரான ஜெரால்ட் வேய்ன் மைக்கேல்சன் என்ற 63 வயது முதியவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது புது மனைவியுடன் பிலிப்பைன்ஸ் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அப்போது அதனை எதிர்த்த அவரது முன்னாள் மனைவியை ஜெரால்ட் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வழக்கு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் ஜெரால்ட் குற்றவாளி என நீருபிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெரால்டின் வழக்கறிஞர் ராமு, ஜெரால்ட் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை எனவும், அவரை தாக்கிய முன்னாள் மனைவியிடம் இருந்து தற்காத்து கொள்ளும் முயற்சியில் அவர் இறந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் வழக்கறிஞர் ராமு தெரிவித்துள்ளார். #Malaysia
Tags:    

Similar News