செய்திகள்

சமீபத்திய பின்னடைவு இறைவன் அளித்த சோதனை - ஐ.எஸ் இயக்க தலைவர் அல் பக்தாதி

Published On 2018-08-23 10:46 GMT   |   Update On 2018-08-23 10:46 GMT
சமீப காலமாக ஐஎஸ் இயக்கம் சந்தித்து வரும் தோல்விகள் இறைவன் அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவித்துள்ளார். #ISIS #AlBaghdadi
டமாஸ்கஸ்:

சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தற்போது பலத்த பின்னடவை சந்தித்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ரஷிய தாக்குதலில் இறந்து விட்டதாக இரண்டு முறை கூறப்பட்டது. 

எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாக கூறின. கடந்த ஓராண்டாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவர் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. 

அதில் அவர் பேசுவதாவது, "ஐஎஸ் சமீபத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடவுள் நம்மை சோதிக்கும் காலம் தான் இது. இந்தக் காலகட்டத்தை பொறுமையுடன் கையாள வேண்டும். பொறுமையோடு இருந்தால் இறைவன் நிச்சயம் நற்செய்தியை அறிவிப்பார். நமது இயக்கத்தினர் பசியுடனும் அச்சத்துடனும் தற்போது வாழ்கின்றனர். இது கடவுள் வகுக்கும் சோதனைக் காலம்'' என்று கூறியுள்ளார். 

எனினும், இந்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
Tags:    

Similar News