செய்திகள்

அமெரிக்காவில் மெக்கானிக் திருடிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

Published On 2018-08-11 07:14 GMT   |   Update On 2018-08-11 07:14 GMT
அமெரிக்காவில் விமான நிலையத்தில் இருந்து மெக்கானிக்கால் திருடிச் செல்லப்பட்ட விமானம், சிறிது தொலைவு சென்றதும் விழுந்து நொறுங்கியது. #Stolenplanecrashes #SeattleAirport
வாஷிங்டன்:

அமெரிக்காவின் சியாட்டில்-டகோமா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு ஹாரிசன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் வேலை செய்துகொண்டிருந்த மெக்கானிக் திடீரென விமானத்தை திருடிச் சென்றுள்ளார்.

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் அனுமதியின்றி விமானம் டேக் ஆப் ஆனதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமானப்படை வீரர்கள் இரண்டு போர் விமானங்களில் அந்த விமானத்தை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர்.


அதேசமயம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள அதிகாரிகள், விமானத்தில் இருந்த மெக்கானிக்கிடம் பேசி தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவருக்கு விமானத்தை இயக்குவதற்கு போதிய பயிற்சி இல்லாததால், விமான நிலையத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கெட்ரான் தீவு அருகே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் மிகப்பெரும்  உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு எதுவும் இல்லை என்றும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் அந்த விமானத்தை மெக்கானிக் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #Stolenplanecrashes #SeattleAirport
Tags:    

Similar News