செய்திகள்

கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் மீதான தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

Published On 2018-08-10 16:16 IST   |   Update On 2018-08-10 16:16:00 IST
கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டவிரோதம் என்ற நிலையை, மாற்றி அவ்வகை திருமணம் மீதான தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #CostaRica
சான்ஜோஸ்;

மத்திய அமெரிக்க நாடாக கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்றும் கிரிமினல் குற்றம் என்றும் சட்டம் இருந்து வந்தது. சமீபத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற அல்வாராடோ ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.

அதன்படி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இவ்வகை திருமணத்தின் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. 

மேலும், 18 மாதங்களில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த தீர்ப்புக்கு அந்நாட்டு பழமைவாதிகள் கட்சியான சுவிஷகர்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

57 இடங்கள் கொண்ட பாராளுமன்ற சபையில் அக்கட்சிக்கு 14 இடங்கள் மட்டும் இருப்பதால், இந்த சட்டம் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News