செய்திகள்

அல் கொய்தாவின் மூத்த தலைவரின் மகளை திருமணம் செய்த ஒசாமா பின்லேடனின் மகன்

Published On 2018-08-06 20:00 IST   |   Update On 2018-08-06 20:40:00 IST
அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஜா பின் லேடன், அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரது மகளை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #OsamaBinLaden #HamzaBinLaden
லண்டன்:

உலகையே அச்சத்தின் உச்சியில் வைத்திருந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல் கொய்தா.. இந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் சர்வதேச நாடுகளால் தேடப்பட்டு வந்தார். இவர் 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

அப்போது அவர் பதுங்கி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒசாமா எழுதிய கடிதம் ஒன்று ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அல் கொய்தா இயக்கத்தில் தனது இடத்தை அவரது மகன்களில் ஒருவரான ஹம்ஜா பின் லேடன் நிரப்புவார் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹம்ஜா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அல் கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட முகமது அட்டாவின் மகளை, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது உறவினர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். #OsamaBinLaden #HamzaBinLaden
Tags:    

Similar News