செய்திகள்

புல்டோசர் ஏற்றி நசுக்கப்பட்ட 60 சொகுசு வாகனங்கள் - ரசித்து வேடிக்கை பார்த்த அதிபர்

Published On 2018-07-31 13:27 GMT   |   Update On 2018-07-31 13:27 GMT
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய 60 சொகுசு கார் மற்றும் பைக்குகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி, புல்டோசர் மூலம் அவற்றை நொறுக்கும் பணியை பிலிப்பைன்ஸ் அரசு மேற்கொண்டது.
மணிலா:

பிலிப்பைன்ஸ் அதிபராக உள்ள ரோட்ரிகோ டுடெர்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். போதை கடத்தலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட, ஐநா சபை கண்டனம் தெரிவித்தற்கு. ஐ.நா சபை தலைவரின் மண்டையை உடைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கேகேயான் மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன.

லம்போர்கினி, போர்ஸ்ச், மெர்ர்சீடெஸ் பென்ஸ், ஹார்லே டேவிட்சன் ஆகிய பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது. பொதுவெளியில் வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது புல்டோசர் ஏறி நசுக்கியது. 

இந்த காட்சியை அதிபர் டுடெர்டே ஹாயாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. (video courtesy Mail Online)


Tags:    

Similar News