செய்திகள்

சிறுநீரக பாதிப்பால் அவதியுறும் நவாஷ் ஷரிப் - சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்?

Published On 2018-07-23 01:31 GMT   |   Update On 2018-07-23 01:31 GMT
பனாமா ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், சிறையில் சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Panamapapers #Nawazsharif
லாகூர்:

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில், கைது செய்யப்பட்ட இவர்கள் இஸ்லாமா பாத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சிறையில் உள்ள நவாஷ் ஷரிப், சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் உடல்நிலையை மருத்துவ குழு நேற்று பரிசோதனை செய்தது. பரிசோதனைக்கு பிறகு நவாஷ் ஷரிப் சிறுநீரங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. 

அவரது இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து, அவர் கடும் உடல் சோர்வுடன் காணப்படுவதாகவும் அவரது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலையில் உரிய சிகிச்சையளிக்கும் வசதிகள் இல்லாததால், நவாஸ் ஷரிப் நிலைமை இன்னும் மோசமாகலாம், எனவே அவரை ஆடிலா சிறையில் இருந்து மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால், நவாஸ் ஷரீப்புக்கு சிறை நடைமுறைகளின்படி வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாசின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Panamapapers #Nawazsharif
Tags:    

Similar News