செய்திகள்

காஷ்மீரில் விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்ற காவலர் பயங்கரவாதிகளால் கடத்திக் கொலை

Published On 2018-07-22 07:49 IST   |   Update On 2018-07-22 09:01:00 IST
ஜம்மு காஷ்மீரில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம், விடுமுறைக்கு தனது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். #Kashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகம்மது சலீமின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சமீபத்தில், இது போல எல்லை பாதுகாப்பு படை வீரர் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News