செய்திகள்

பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்

Published On 2018-07-17 05:04 GMT   |   Update On 2018-07-17 05:04 GMT
பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் பல லட்சம் கோடி வைரங்கள் புதைந்து கிடப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை மலைகள் போன்று, குன்றுகள் போன்றும் உள்ளன.

பல லட்சம் டன் எடை உள்ள வைரங்கள் பாறை படிமங்களாக கிடக்கின்றன. ஆனால் அவற்றை துளையிட்டோ, வெட்டியோ எடுக்க முடியாது. ஏனெனில் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 150 மைல் ஆழத்தில் உள்ளன. இந்த தகவல் ஜியோ ரசாயனம் ஜியோ இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளியாகி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News