செய்திகள்

குல்பூ‌ஷண் ஜாதவ் வழக்கு - சர்வதேச கோர்ட்டில் 17–ம் தேதி பாகிஸ்தான் பதில் தாக்கல்

Published On 2018-07-12 16:24 GMT   |   Update On 2018-07-12 16:24 GMT
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவ் வழக்கில் 17-ம் தேதி பாகிஸ்தான் பதில் தாக்கல் செய்கிறது. #Pakistan
இஸ்லாமாபாத்:

ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்திருந்தது.

இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கில் இந்தியா தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 17–ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதத்தினை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தனது பதில் வாதத்தை வரும் 17-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. #Pakistan
Tags:    

Similar News