செய்திகள்
முகமது சப்தார்

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ்செரீப் மருமகன் கைது

Published On 2018-07-09 06:23 GMT   |   Update On 2018-07-09 06:23 GMT
பனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் செரீப் மருமகன் முகமது சப்தாரை பாகிஸ்தான் உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது செய்தனர். #MuhammadSafdar #NawazSharif
இஸ்லாமாபாத்:

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகளும், அவரது கணவர் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பேரணி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. நவாஸ்செரீப் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவரது மருமகன் முகமது சர்தார் கலந்து கொண்டார்.

அதை அறிந்த சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகள் அங்கு வந்து அவரை கைது செய்தனர். அவரை கைது செய்ய விடாமல் நவாஸ்செரீப் ஆதரவாளர்கள் 3 ஆயிரம் பேர் வாகனத்தை சுற்றி வளைத்து தடுத்தனர்.

இருந்தும் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்ற அதிகாரிகள் போலீசிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அதில் பாராளுமன்றத்துக்கும், மென்சரா சட்டசபை தொகுதியிலும் சப்தார் போட்டியிடுகிறார். #MuhammadSafdar  #NawazSharif
Tags:    

Similar News