செய்திகள்

துருக்கி அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள எர்டோகனுடன் தொலைபேசியில் புதின் ஆலோசனை

Published On 2018-06-25 12:32 GMT   |   Update On 2018-06-25 12:35 GMT
துருக்கி அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள தாயிப் எர்டோகனுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TurkeyElection #Erdogan #VladimirPutin
அங்காரா :

550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் துருக்கியின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார் எர்டோகன்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகனுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி வாயிலாக இன்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது, துருக்கி மற்றும் ரஷியா இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மேலும், பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்த அவர்கள், முக்கியமாக சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பரஸ்பரம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #TurkeyElection #Erdogan #VladimirPutin
Tags:    

Similar News