செய்திகள்

பதவியை தக்கவைப்பாரா தாயிப் எர்டோகன்? - துருக்கி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2018-06-24 07:08 GMT   |   Update On 2018-06-24 07:08 GMT
துருக்கி அதிபர் பதவிக்கான மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். #TurkeyElection #Erdogan
அங்காரா:

550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.



இந்நிலையில், அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஏ.கே கட்சியின் சார்பில் கடந்த 2014-ல் எர்டோகன் முதன் முறையாக அதிபரானார். எதிர்ப்பலைகள் இல்லை என்பதால் இரண்டாவது முறையாக அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அதிபர் போட்டியில் உள்ள குடியரசு மக்கள் கட்சியின் முஹாரம் இன்ஸ் கடும் சவால் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News