செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலால் கொல்ல முயற்சி - ஜிம்பாப்வே அதிபர் மயிரிழையில் உயிர் தப்பினார்

Published On 2018-06-23 14:00 GMT   |   Update On 2018-06-23 14:00 GMT
தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். #Zimbabwepresidenrally
ஹராரே:

ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்களை அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Zimbabwepresidenrally  #EmmersonMnangagwa  #Mnangagwanothurt
Tags:    

Similar News