செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் பயங்கரவாதி சயீத்தின் மகன்- மருமகன் போட்டி

Published On 2018-06-22 05:39 GMT   |   Update On 2018-06-22 05:39 GMT
பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கான தேர்தலில் பயங்கரவாதி ஹபீஸ் சயீதியின் மகன் ஹபீஸ் தல்கா சயீத் மற்றும் மருமகன் ஹபீஸ் சாலித் வாலீத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #HafizSaeed #GeneralElections2018
லாகூர்:

பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜமாத்-உத்தலா தீவிரவாத அமைப்பு போட்டியிடுகிறது.

அக்கட்சி மல்பி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியை தொடங்கி பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்தது. ஆனால் அதற்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் தரவில்லை.

எனவே அல்லா-வு-அக்பர் தெக்ரிக் என்ற பதிவு செய்த அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜமத்- உத்-தவா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லா-வு-அக்பர் தெக்ரிக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மொத்தம் 265 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர். அவர்களில் 80 பேர் பாராளுமன்றத்துக்கும் 185 பேர் சட்டமன்றத்துக்கும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். இவர்களில் தீவிரவாத ஹபீஸ் சயீதியின் மகன் ஹபீஸ் தல்கா சயீத் மற்றும் மருமகன் ஹபீஸ் சாலித் வாலீத் ஆகியோரும் முக்கியமானவர்கள்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாங்கள் போட்டியிடவில்லை. லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும். பாகிஸ்தானின் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இஸ்லாமின் கோட்டையாக பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என தேர்தல் போட்டியிடுகிறோம் என்றனர். இவர்களின் மனு தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சயீத்தின் மகன் தல்ஹா சர்கோடா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இது ஹபீஸ் சயீத்தின் சொந்த நகரமாகும். மருமகன் ஹாலித் வாலீத் லாகூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு நாற்காலி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதி சயீத் மும்பை தாக்குதலில் முறையாக செயல்பட்டவன். அவன் தலைக்கு அமெரிக்க அரசு ரூ.6½ கோடி பரிசு அறிவித்துள்ளது. #HafizSaeed #GeneralElections2018
Tags:    

Similar News