செய்திகள்

புழுதி புயல் தாக்கியதில் நிறம் மாறிய செவ்வாய் கிரகம் - கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

Published On 2018-06-21 09:47 GMT   |   Update On 2018-06-21 09:47 GMT
செவ்வாய் கிரகத்தில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் மாசு கலந்து புழுதி புயலினால் ஏற்பட்ட மாற்றங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover

வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக சமீபத்தில் நாசா தகவல் அறிவித்தது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இதனிடையே கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயல்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.



இந்நிலையில், புழுதி புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்து பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover
Tags:    

Similar News