செய்திகள்

வங்கதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக்கொலை - மசூதி அருகே நடந்த கொடூரம்

Published On 2018-06-15 14:02 GMT   |   Update On 2018-06-15 15:02 GMT
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து திரும்பியபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். #AwamiLeagueLeaderKilled
டாக்கா:

வங்கதேசத்தில் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் பர்கத் அலி. கட்சியின் பத்தா யூனியன் பொதுச் செயலாளரான இவர் இன்று மசூதிக்கு சென்று தொழுகையில் பங்கேற்றார். தொழுகை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் மார்பு மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்ததால், பர்கத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மசூதிக்கு வெளியே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பர்கத் அலி கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

பத்தா பகுதியில் இரு குழுவினருக்கிடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #AwamiLeagueLeaderKilled
Tags:    

Similar News