செய்திகள்

அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

Published On 2018-06-14 14:45 IST   |   Update On 2018-06-14 14:45:00 IST
அமெரிக்காவில் உள்ள கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவ்ய சூர்யதேவரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #DhivyaSuryadevara
ஹுஸ்டன்:

அமெரிக்காவில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து ஜெனரல் மோட்டார்சின் துணை தலைவராக பணியாற்றி வந்தவர் திவ்ய சூர்யதேவரா.

இவர் நிதித்துறையில் முக்கிய பங்காற்றி வந்தார். ஜெனரல் மோட்டார்சின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், ஜெனரல் மோட்டார்சின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை எந்த பெண்ணின் இந்த பதவியை வகித்ததில்லை. அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பெண் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #DhivyaSuryadevara
Tags:    

Similar News