என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெனரல் மோட்டார்ஸ்"

    • இந்த குறைபாடு பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் கொண்டது.
    • ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கியது.

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளின் உயிரை பறிக்கச் செய்யும் ஏர் பேக் கோளாறு காரணமாக சுமார் பத்து லட்சம் எஸ்யுவி-க்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதில் 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புய்க் என்க்லேவ், செவர்லட் டிராவெர்ஸ் மற்றும் ஜிஎம்சி அகாடியா போன்ற மாடல்கள் அடங்கும்.

    பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஏர்பேக்-ஐ செயல்பாட்டுக்கு வரச் செய்யும் உபகரணம் வெடிக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வெடிக்கும் பட்சத்தில் கூர்மையான மெட்டல் பாகங்கள் கேபினுள் வீசப்படும். இது பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    2017 செவரலட் டிராவெர்ஸ் மாடல் விபத்தில் சிக்கும் போது ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை. இதை தொடர்ந்து தான், இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. மே 10, 2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாத வாக்கில் அதுபற்றிய அறிவிப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தங்களது கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பயனர்கள் NHTSA ரிகால்ஸ் வலைதளம் சென்று பார்க்கலாம்.

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா அந்நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக நியமிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா செப்டம்பர் 1, 2018 முதல் தலைமை நித அலுவலராக பணியாற்ற இருக்கிறார். 

    சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக துறையில் பட்டமேற்படிப்பை நிறைவு செய்த திவ்யா, ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். இவர் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கடந்த சில ஆண்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட திவ்யா முக்கிய பங்கு வகித்திருக்கிறார். 

    13 ஆண்டுகளாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திவ்யா நிறுவனத்தின் நன்மதிப்பு உயர பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டு நிறுவனத்தின் நிதி துறையில் துணை தலைவராக பதவியேற்ற திவ்யா முதலீடு குறித்த பணிகளில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.

    தலைமை நிதி அலுவலர் பதவியேற்றதும் திவ்யா, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மேரி பாராவின் கீழ் பணியாற்றுவார். "திவ்யாவின் அனுபவம் மற்றும் நிதி துறை சார்ந்த பல்வேறு பணிகளில் இவரது தலைமை நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது," என மேரி பாரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

    புகைப்படம்: நன்றி gm.com
    அமெரிக்காவில் உள்ள கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவ்ய சூர்யதேவரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #DhivyaSuryadevara
    ஹுஸ்டன்:

    அமெரிக்காவில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து ஜெனரல் மோட்டார்சின் துணை தலைவராக பணியாற்றி வந்தவர் திவ்ய சூர்யதேவரா.

    இவர் நிதித்துறையில் முக்கிய பங்காற்றி வந்தார். ஜெனரல் மோட்டார்சின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், ஜெனரல் மோட்டார்சின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை எந்த பெண்ணின் இந்த பதவியை வகித்ததில்லை. அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பெண் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #DhivyaSuryadevara
    ×