செய்திகள்

தென்னாப்பிரிக்க அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Published On 2018-06-03 23:26 GMT   |   Update On 2018-06-03 23:26 GMT
5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் நேற்று தென்னாப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோசாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #CyrilRamaphosa #SushmainSouthAfrica #BRICS

ஜோகனஸ்பர்க்:

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் இன்று (4-ம் தேதி) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.



நேற்று ஜோகனஸ்பர்க் நகரை சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை மந்திரி லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் அந்நாட்டு அதிபர் சைரில் ரமபோசாவை சந்தித்து சுஷ்மா சுவராஜ் இருநாட்டு உறவுகள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #CyrilRamaphosa #SushmainSouthAfrica #BRICS
Tags:    

Similar News