செய்திகள்

ஸ்பெய்ன் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்சஸ் பதவியேற்பு

Published On 2018-06-02 11:13 GMT   |   Update On 2018-06-02 11:13 GMT
ஸ்பெய்ன் பிரதமராக இருந்த மரியான ரஜாய் பதவி விலகியதை அடுத்து பெட்ரோ சான்சஸ் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். #SpainPM #PedroSanchez
மாட்ரிட் :

ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மரியானா ரஜாய் தோல்வியடைந்தார். இதனால் ரஜாய் பதவி விலகினார்.

இதனை அடுத்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்தனர். பெட்ரோ சான்செஸ் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதால் சான்செஸ் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஸ்பெய்ன் பிரதமராக பெட்ரோ சான்செஸ், மன்னர் ஃபெலிப் முன்னிலையில் இன்று பதவியேற்றுக்கொண்டார். வழக்கம்போல பைபில் அல்லது க்ரூசிஃபிஸ் மீது ஆணையிட்டு பதவியேற்காமல் முதல் முறையாக அரசியலைமைப்பு சட்டத்தின் மீது ஆணையிட்டு பெட்ரோ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

வரும் 2020-ம் ஆண்டு வரை பெட்ரோ சான்சஸ் ஸ்பெய்ன் பிரதமராக பதவி வகிப்பார். அந்நாட்டிற்கு பிரதமராக பதவியேற்ற 7-வது நபர் பெட்ரோ சான்சஸ் என்பது குறிப்பிடத்தக்கது. #SpainPM #PedroSanchez
Tags:    

Similar News