செய்திகள்

முதன்முறையாக மதுபான தயாரிப்பில் கால்பதித்த கோகோ-கோலா நிறுவனம்

Published On 2018-05-31 23:46 GMT   |   Update On 2018-05-31 23:46 GMT
உலக புகழ்பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ-கோலா, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக மதுபானத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. #LemonDo #firstalcoholicdrink #CocaCola

கோகோ-கோலா, உலக புகழ்பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோகோ-கோலா நிறுவனம் முதன்முறையாக மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானின் சூ கி என்ற நிறுவனத்துடன் இணைந்து கோகோ-கோலா நிறுவனம் மதுபான விற்பனையை துவக்கியுள்ளது.

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள லெமன்-டோ என்ற இந்த மதுபானம் லேசான எலுமிச்சையின் சுவையைக் கொண்டிருக்கிறது. அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குளிர்பானத்தை இளம் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்று அதை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது. 



பீருக்கு போட்டியாக இந்த பானத்தின் விற்பனை இருக்கும் எனவும், ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை எனவும் கோகோ-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜப்பானில் 350 மில்லி லீட்டர் கேன் அளவில் கிடைக்கும் இதன் விலை 150 யென் (இந்திய மதிப்பில் 93 ரூபாய்). 125 ஆண்டுகளாக இயங்கி வரும் கோகோ-கோலா நிறுவனம் முதல் முறையாக மதுபான தயாரிப்பில் கால்பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LemonDo #firstalcoholicdrink #CocaCola
Tags:    

Similar News