செய்திகள்

இந்தோனேசியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மோடி கடும் கண்டனம்

Published On 2018-05-30 10:26 GMT   |   Update On 2018-05-30 10:26 GMT
அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இம்மாத தொடக்கத்தில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #ModiInIndonesia
ஜகார்த்தா:

இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று இந்தோனேசியா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மோடி கூறியதாவது, ‘இந்தோனேசியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில் இந்தோனேசியா உடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் பேசினார்.

இந்த மாத தொடக்கத்தில் சுரபயா நகரில் உள்ள மூன்று சர்ச்சுகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News