செய்திகள்

ஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

Published On 2018-05-28 04:56 IST   |   Update On 2018-05-28 04:56:00 IST
ஓமன், ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 11 பேர் பலியாகினர். #Cyclone #Omen #Yemen
துபாய்:

அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  #Yeman #Omen #Cyclone 
Tags:    

Similar News